Saturday, May 17, 2008

லேஷிங் என்றால் என்ன ? What is Lashing?

லேஷிங் (Lashing) என்றால் கெட்டியாக, இறுக்கி கட்டுதல் என்று பொருள். கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் செல்லும் கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள கண்டைனர்கள் சரிந்து கீழே விழாமல் இருக்க ஒவ்வொரு கண்டைனரையும் கப்பலில் உள்ள இரும்புப் பிடிகளுடன் இரும்பு பார்கள் என்று சொல்லப்படும் மொத்தமான கம்பிகளை கொண்டு கட்டி வைத்திருப்பார்கள். இதுதான் லேஷிங் முறை. இவ்வேலை புரிவோர் லேஷிங் மேன் என்றழைக்கப்படுவர்.


* சிங்கப்பூரில் லேஷிங் மென் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வேலைக்கு என பொதுவாக Stevedore என்றே சொல்வார்கள். இதன் பொருள், ஒரு கப்பலின் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட எவரையும் இப்படி அழைக்கலாம்.



* வேலையின் தன்மை :

துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பலின் அளவைப் பொருத்த மட்டில் கண்டைனர்களை கப்பலில் ஏற்ற இறக்க பயன்படுத்தும் கியு கிரேன்கள் நிர்வகிக்கப்படும். அந்த வகையில் ஒரு Crane-க்கு என்று மொத்தம் 4 அல்லது 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பர். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் என அவரவர் அனுபவத்தை பொறுத்தமட்டில் வேலை தன்மை மாறலாம். இவர்கள் தவிர கிரேனை நிர்வகிக்க Crane Operator ஒருவரும், Wharf Opeartions Supervisor (WOS) ஒருவரும் பணியில் இருப்பார். 


ஏற்கனவே சொல்லியுள்ளது போல் 4 பணியாளர்களில் ஒருவர் ரேடியோ செட் மூலம் கப்பல் சார்ந்த தகவல்களை Crane Operator, WOS, மற்றும் கப்பலின் துறைமுகக் கழகம் சார்ந்த பொறுப்பு அதிகாரிக்கு தெரிவிப்பார். இவ்வாறு, ஈடுபடும் நபருக்கு சிங்கப்பூர் வழக்கில் 'சேரா' என்று அழைப்பர். அதாவது, Ship Traffic Assistant. இத்தகுதி, ஒரு வருடம் முடிந்து இதற்குரிய தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே கிடைக்கப்பெறும்.


* லேஷிங் பணிகள்:

1. Lashing Man
2. Coneman
3. Reefer Man